செய்திகள் மலேசியா
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: டாக்சி ஓட்டுநர் பலி, நால்வர் காயம்
குவாந்தான்:
ரோம்பின் பகுதியில், மலேசிய பனை எண்ணெய் வாரியத்தின் (MPOB) எடைக்கூடம் அருகே, குவாந்தான்–செகாமாட் சாலையின் 143வது கிலோமீட்டரில் நேற்று இரவு நடந்த மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், ஒரு டாக்சி ஓட்டுநர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
Toyota Vios, Proton Wira, Perodua Alza ஆகிய வாகனங்கள் மோதிய விபத்தில் சிக்கிய கிளந்தான் மாநிலம் கோத்தா பாருவைச் சேர்ந்த 60 வயதுடைய அப்துல் ரஹ்மான் யூசோஃப், நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் முஆட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், 26 வயதுடைய Toyota Vios ஓட்டுநர் செகாமாட்டிலிருந்து குவாந்தான் நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும், மற்ற இரண்டு வாகனங்கள் எதிர்திசையில் வந்ததாகவும் ரோம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷெரீப் மொண்டோய் கூறினார்.
“Toyota Vios ஓட்டுநர் வாகன கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் நுழைந்து, எதிரே வந்த இரண்டு வாகனங்களை மோதியதாக நம்பப்படுகிறது.
தலையில் பலத்தக் காயங்களுக்கு உள்ளான Perodua Alza ஓட்டுநர், முஆட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த டாக்சி ஓட்டுநரின் 58 வயதுடைய மனைவி, 20 வயது மகன், 14 வயது பேத்தி ஆகியோரும் காயமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
“Toyota Vios ஓட்டுநரும் காயமடைந்துள்ளார். 56 வயதுடைய Proton Wira ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த வழக்கு, 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள், ரொம்பின் மாவட்ட போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கப் பிரிவு (BSPTD) விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நோர் அசிகின் தாவுத் (011-10815434) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 12:58 pm
காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி
February 6, 2026, 12:28 pm
மூன்று வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது
February 6, 2026, 11:21 am
EPF-ன் i-Lindung பாதுகாப்பு திட்டம்; இந்திய சமுதாயத்திடையே முழு விழிப்புணர்வு தேவை: கோகுல நாதன்
February 6, 2026, 9:07 am
சீனப் பெருநாள் காலத்தில் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் நான்கு நாட்களுக்கு சாலைகளில் இயங்கத் தடை
February 6, 2026, 8:57 am
13 வயது மாணவரைப் பலமுறை பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் கைது
February 5, 2026, 11:14 pm
டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள அந்நியத் தொழிலாளர்களுக்கான புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது: டத்தோ அப்துல் ஹமித்
February 5, 2026, 11:13 pm
பல இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை; சீனப் பள்ளியின் தரத்தைப் பாதிக்காது: ஃபட்லினா
February 5, 2026, 11:12 pm
