நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகவியலாளர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது குறித்து மலேசிய ஊடக மன்றம் விவாதிக்க வேண்டும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

ஊடகவியலாளர்கள் வீட்டில் இருந்து பணி புரிவது குறித்து மலேசிய ஊடக மன்றம் அனைத்து தரப்பினருடன் விவாதிக்க வேண்டும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

ஊடகத் துறையினர்  வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பெற வேண்டும்.

இதற்கு  உள்ளூர் ஊடக நிறுவனங்கள், அமைப்புகளுடன் மலேசிய ஊடக மன்றம்  கலந்துரையாட வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஒவ்வொரு முடிவிலும், நாட்டில் உள்ள ஊடகத் துறை ஊழியர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே அமைச்சகத்தின் முக்கிய நோக்கம்.

அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைப் பெறுவது உட்பட, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தகவல் துறையையும் நான் கேட்டுக் கொள்வேன்.

அதிலிருந்து பெறப்படும் மேலதிக பரிசீலனைகளை அரசுப் பணித் தலைமை இயக்குநர் அனுப்பி, அமைச்சரவை,  அமைச்சிற்கு தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset