நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவிற்கான மனிதாபிமானப் பணி, குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா திட்டத்திற்கு சிலாங்கூர் மந்திரி புசார் தலைமை தாங்குகிறார்

ஷாஆலம்:

காசாவிற்கான 30 கொள்கலன்கள் கொண்ட மலேசிய மனிதாபிமானப் பணி, குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா 2.0 தூதுக்குழுவிற்கு பிரதமர் சார்பாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி தலைமை தாங்கவுள்ளார்.

மலேசிய இஸ்லாமிய ஆலோசனைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பணி, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக 374 டன் மனிதாபிமான உதவிகளைக் கொண்ட 30 கொள்கலன்களை வழங்கும்.

கெய்ரோவில் கொள்கலன்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதை உறுதிசெய்து, மனிதாபிமானத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவதற்காக மந்திரி புசார் ஏப்ரல் 5 அன்று புறப்படுவார்.

காசா மீதான முற்றுகைப் பிரச்சினையில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, அவர் ராஃபா எல்லைக் கடப்பில் ஒரு சிறப்பு அமர்வுக்கு அவர் தலைமை தாங்குவார்.

பின்னர், ஸ்பெயினின் பார்சிலோனா துறைமுகத்தில் சுமுத் நுசாந்தரா தூதுக்குழுவினர் புறப்படுவதைக் கண்காணிப்பார்.

இந்த சவாலான,  அபாயகரமான பணியை முன்னிட்டு மந்திரி புசார் ஒவ்வொரு அதிகாரியும் வழிநடத்தும் தேசியப் பணி சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற வேண்டும்.

ஆக அனைத்து சிலாங்கூர், மலேசிய மக்களும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset