செய்திகள் மலேசியா
மலேசியாவில் அழியும் நெல் வயல்கள்
பெக்கான்:
நாடு முழுவதும் 20,000 ஹெக்டேருக்கும் அதிகமான நெல் வயல்களை இழந்துவிட்டதாக வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகள் வீடமைப்பு, பிற திட்டங்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன அல்லது விவசாயிகளால் கைவிடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
"வணிக அல்லது குடியிருப்பு என எந்த வகையிலான பிற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மாற்றப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் 20,000 ஹெக்டேருக்கும் அதிகமான நெல் வயல்களை நாம் இழந்துள்ளோம்" என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
இளைய குடும்பங்கள் விவசாயத்தைத் தொடராமல், நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததால் பல வயல்கள் கைவிடப்பட்டுள்ளதாக முஹம்மத் சாபு மேலும் கூறினார்.
நில உரிமையாளர்களுடனான குத்தகை ஒப்பந்தங்கள் மூலம் கைவிடப்பட்ட வயல்களை மேம்படுத்த, நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, பகாங் துவாவில் கைவிடப்பட்ட வயல்களைக் குத்தகைக்கு எடுத்து மீண்டும் மேம்படுத்துவதற்கான பி.எல்.எஸ் குழுமத்தின் ஒப்பந்தத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இது மறைமுகமாக, தங்கள் நிலங்களைப் பயிரிட இயலாத முதிய விவசாயிகளுக்குப் பயனளிப்பதோடு கைவிடப்பட்ட பகுதிகளையும் குறைக்கிறது என்றார் அவர்.
பகாங் துவா மீள் திறப்புத் திட்டம் 200 ஹெக்டேர்களை உள்ளடக்கியது. 548 உள்ளூர் விவசாயிகளில் 100 பேர் பி.எல்.எஸ் மூலம் பங்கேற்கின்றனர்.
தனது நிறுவனம் சுமார் 200 ஹெக்டேர் கைவிடப்பட்ட நிலத்தை அழித்து சுத்தம் செய்துள்ளது என்று பி.எல்.எஸ் திட்ட மேற்பார்வையாளர் டாக்டர் ஹுஷைமி இஸ்மாயில் கூறினார்.
விவசாயிகளுடனான ஆறு பருவகால குத்தகை ஒப்பந்தம் மூலம் 72 ஹெக்டேர்கள் இப்போது பயிரிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 2:57 pm
