செய்திகள் மலேசியா
மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நாட்டின் முதல் மடானி மார்ட்: பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்
குவாந்தான்:
நாட்டின் முதல் மடானி மார்ட்டை கடையை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மலிவான விலைக்கான அங்காடி கடை என்ற முழக்கத்தின் அடிப்படையில், அன்றாடத் தேவைகளை மலிவு விலையில் மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் இந்த மடானி மார்ட் இந்திரா மக்கோத்தா 8இல்திறக்கப்பட்டது.
மடானி அறக்கட்டளையின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும்.
மேலும் வாழ்க்கைச் செலவு சவால்களை முழுமையாக எதிர்கொள்வதற்கும் அரசாங்கத்தின் மூலோபாய முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.
பிரதமர், பகாங் மந்திரி புசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுக்கான துணையமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சல்லே ஆகியோர் இன்றை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மடானி மார்ட் என்பது வெறும் ஒரு துணை அம்சம் மட்டுமல்ல.
ரஹ்மா விலையின் பலன்களை மக்களுக்கு மேலும் சீராகவும், முறையாகவும், நெருக்கமாகவும் கிடைக்கச் செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை என்று துணையமைச்சர் ஃபுசியா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
மலேசியாவில் அழியும் நெல் வயல்கள்
April 3, 2026, 2:57 pm
