செய்திகள் மலேசியா
ரந்தாவ் பேபி சிவன் ஆலயத்தில் வால்முனீஸ்வரர் சிவபெருமானுக்கு மகா கும்பாபிஷேகம்: ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும்
ரந்தாவ்:
ரந்தாவ் கம்போங் உலு சாவா ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் வால் முனீஸ்வரர் சிவபெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
இக்கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 9.36 மணி முதல் 10.58 வரை நடைபெறும் என்று ஆலய ஸ்தாபகர் அப்பா முருகவேல் தெரிவித்தார்.
மலேசியத் திருநாட்டில் பேபி சிவன் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் 52 அடி உயரத்தில் கம்பீரமாக வால்முனி சிவபெருமான் சிலை கட்டப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த மகா கும்பாபிஷேகத்தை பிரதிஷ்டா திலகம், கும்பாபிஷேக ரத்னா சில ஆகம கிரிய பூஷணம் சிவ ஸ்ரீ ஆனந்தவர்த்தன அகோர சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் ஆகம முறைப்படி மகா நடைபெறுகிறது.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கும்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை காண நாடு தழுவிய அளவில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
பக்தர்கள், பொதுமக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மகா கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
52 அடி உயரத்தில் கட்டப்பட்டு மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் வால்முனி சிவபெருமான் சிலை பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்று அவர் சொன்னார்.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ஆலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஆலயத் துணை தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பிரேம்குமார், கவிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
மலேசியாவில் அழியும் நெல் வயல்கள்
April 3, 2026, 2:57 pm
