செய்திகள் மலேசியா
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
கோல நெரூஸ்:
புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம், ஜூன் மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாக முடிவு செய்யப்படும்.
பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இதனை தெரிவித்தார்.
இன்று இங்கு நடைபெற்ற துஹா சொற்பொழிவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மராங் நாடாளுமன்ற உறுப்பினர்,
அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகே இந்தப் பதவி குறித்த முடிவு இறுதி செய்யப்படும்.
மக்களவை கூட்டத்தொடர் ஜூன் மாதத்தில் மட்டுமே நடைபெற உள்ளது.
மேலும் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைகள், தேசியக் கூட்டணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தற்போதைய முன்னுரிமை கவனம் செலுத்தப்படுகிறது.
இதனால் இந்த முடிவை எடுக்கப் போதுமான அவகாசம் உள்ளது.
இந்த விவகாரம் அனைத்துக் கட்சிகளுடனும் விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இதில் ஒரு கட்சியை மட்டும் அல்ல, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சபா, சரவா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்.
வேட்பாளருக்கு அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் தேவை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
மலேசியாவில் அழியும் நெல் வயல்கள்
April 3, 2026, 2:57 pm
