நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்

கோலாலம்பூர்:

எஸ்ஆர்சி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை நிறுத்தி வைக்குமாறு டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தாக்கல் செய்த மனுவின் மீதான செலவுகள் குறித்து முடிவு செய்யவும், அதனை விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் இன்று மே 7 ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

எஸ்ஆர்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ லிம் சீ வீ, உதவிப் பதிவாளர் முகமது ஷாபிக் முஸ்தாசா இந்தத் தேதியை இணையவழியில் நிர்ணயித்ததை உறுதிப்படுத்தினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் ஜூம் (இணையவழி) மூலம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று, முன்னாள் பிரதமர் தனது நம்பகக் கடமைகளை மீறியது, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக நிறுவன நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்ஆர்சி நிறுவனத்திற்கு ஏற்பட்ட 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பிற்கு அவரே பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset