நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செலயாங்கில் நடந்த துஷ்பிரயோக வழக்கைத் தொடர்ந்து, ஆதரவற்றோர் இல்லங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

செலயாங்கில் நடந்த துஷ்பிரயோக வழக்கைத் தொடர்ந்து, ஆதரவற்றோர் இல்லங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலா மோகன் இதனை கூறினார்.

தாமான் செலாயாங் பெர்மாடாவில் உள்ள பதிவு செய்யப்படாத ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில்  துஷ்பிரயோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தின் தரம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

ஒரு ஆதரவற்றோர் இல்லம் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக சட்டவிரோதமாக, கண்டறியப்படாமல் செயல்படுவது கவலையளிக்கிறது.

இந்த விவகாரம் கண்காணிப்பு அமைப்பின் செயல்திறன் குறித்து பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இது போன்ற வளாகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் வகையில் கண்காணிப்பில் பலவீனங்கள் உள்ளதா? என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

அதிகாரிகளுக்குத் தெரியாமல் குழந்தைகளைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் அபாயம் உள்ள, மேலும் பல பதிவு செய்யப்படாத வளாகங்கள் உருவாக இந்தச் சம்பவம் வழிவகுக்கிறது.

ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோகம் குறித்த அறிக்கைகள் நீண்ட காலமாக நீடிப்பதாகவும், அவை நடந்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset