செய்திகள் மலேசியா
எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் பயணி விழுந்ததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது
கோலாலம்பூர்:
தலைநகர் அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் ஒரு பயணி தவறி விழுந்துள்ளார்.
கிடைத்த தகவல்களின்படி, மாலை சுமார் 6.09 மணியளவில் ரேபிட் கேஎல் ரயில் தண்டவாளத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் ரயிலுக்கு அடியில் விழுந்துள்ளார்.
ரேபிட் ரயில் நிறுவனம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியது.
மேலும் மீட்புப் பணிகளுக்கு வழிவிடுவதற்காக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்ததை அது தெரிவித்தது.
போலிஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் குழுக்கள் சம்பவ இடத்தில் தங்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பதுடன், பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, யுனிவர்சிட்டி, கெரின்ச்சி, அப்துல்லா ஹுக்கும் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
