செய்திகள் மலேசியா
மூன்று வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது
ஷா ஆலம்:
கம்போங் செரி சீடிங், கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜாலான் நூரியில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் தீக்கிரையானதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அதிகாலை 2.44 தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர், அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தெலுக் பாங்லிமா காராங், பந்திங், KLIA தீயணைப்பு நிலையங்களிலிருந்து 17 வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
“மூன்று வீடுகள் இந்த சம்பவத்தில் தீக்கிரையாகியுள்ளன. ஒவ்வொரு வீட்டும் சுமார் 90 சதவீதம் எரிந்தது குறிப்பிடத்தக்கது.
“மேலும், மூன்று வயதுடைய ஒரு குழந்தை வீட்டிற்குள் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்தது,” என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று மேலும் பேசிய அஹ்மத் முக்லிஸ் கூறினார்.
அதிகாலை 3.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
“சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அதாவது காலை 4.15 மணியளவில், குழந்தை தீயில் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 11:09 pm
எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் பயணி விழுந்ததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
