செய்திகள் மலேசியா
EPF-ன் i-Lindung பாதுகாப்பு திட்டம்; இந்திய சமுதாயத்திடையே முழு விழிப்புணர்வு தேவை: கோகுல நாதன்
கோலாலம்பூர்:
ஈபிஎப்பின் i-Lindung பாதுகாப்பு திட்டம் குறித்து இந்திய சமுதாயத்திடையே முழு விழிப்புணர்வு தேவை.
கேடி அல்டிமேட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கோகுல நாதன் இதனை கூறினார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தலைநகரில் சிறப்பு விழிப்புணர்வு, பிரச்சார நிகழ்வு நடைபெற்றது. சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி அஹ்மத் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.
மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கேடி அல்டிமேட் நிறுவனமும் இணைந்தது பெருமை.
குறிப்பாக கேடி அல்டிமேட் நிறுவனம் இங்கு முகாம் அமைத்து ஈபிஎப்பின் i-Lindung பாதுகாப்பு திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளித்தது.
ஈபிஎப் உறுப்பினர்களுக்கு மகத்தான பாதுகாப்பை இந்த i-Lindung திட்டம் தருகிறது.
இருந்த போதிலும் இது குறித்து இந்திய சமுதாயத்திடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சிகளை கேடி அல்டிமேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஆக இந்திய மக்கள் உட்பட அனைவரும் குறிப்பாக ஈபிஎப் உறுப்பினர்கள் இதில் பயன் பெற வேண்டும் என கோகுல நாதன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 11:09 pm
எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் பயணி விழுந்ததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
