செய்திகள் மலேசியா
13 வயது மாணவரைப் பலமுறை பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் கைது
கோலாலம்பூர்:
13 வயது மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் பள்ளி ஆசிரியரைச் சம்பந்தப்படுத்தியப் புகார் ஒன்றைப் பெற்றுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் டேசா பண்டான் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 3, மதியம் 12.27 மணியளவில் இப்புகார் பெறப்பட்டதாக வங்சா மாஜு மாவட்ட காவல்துறை தலைவர், ஏசிபி முஹம்மது லசீம் இஸ்மாயில் கூறினார்.
“பாதிக்கப்பட்ட மாணவரிடம் பாலியல் சேட்டை செய்த சந்தேக நபர் அந்தப் பள்ளியின் ஆசிரியராக உள்ளவர் என்றும், தான் அவரால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம் 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (AKSTKK), பிரிவு 14(d) அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாகச் சந்தேக நபர் வேறு வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறை, ஆறு பிரம்படிகளைப் பெற்றுள்ளதாக முகமது லசீம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 11:09 pm
எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் பயணி விழுந்ததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது
April 3, 2026, 5:49 pm
எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: ஹாடி
April 3, 2026, 5:46 pm
எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் தாக்கல் செய்த மனு மே 7இல் விசாரிக்கப்படும்
April 3, 2026, 3:11 pm
