செய்திகள் விளையாட்டு
கராபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் மோதல்
லண்டன்:
கராபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் அணிகள் மோதவுள்ளன.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை ஒமார் மர்மௌஷ், திஜ்ஜானி ரெய்ண்டர்ஸ் ஆகியோர் அடித்தனர்.
இதை தொடர்ந்து இரு ஆட்டங்களின் முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் சிட்டி அணியினர் கராபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
மாபெரும் இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அர்செனல் அணியுடன் மோதவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 9:16 am
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்
April 2, 2026, 11:34 am
"நானும் ஒரு முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்": இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஸ்பெயின் வீரர்
April 1, 2026, 5:18 pm
ஸ்பெயின் கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்: நீதி அமைச்சர் கடும் கண்டனம்
April 1, 2026, 4:15 pm
கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி
April 1, 2026, 11:48 am
மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி
March 31, 2026, 8:56 am
