நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்

ஈப்போ:

ஈப்போவில் தேசிய நிலையில் நடைபெற்ற சோழா கிண்ண கால்பந்து போடியில் 15 குழுக்கள் பங்கேற்றன.

பேரா தம்பூன் விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களிடையே நட்புறவை ஏற்படுத்தவும், அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கமளிக்கவும் இப்போட்டி நடத்தப்பட்டது என்று அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லிங்கேஸ்வரன் அண்ணாமலை கூறினார்.

ஈப்போவில் உள்ள ஈப்போ பாடாங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் கெடா, சிலாங்கூர், பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இருந்து 15 குழுக்கள்  பங்கேற்றது.

உலகில் பல இடங்களில் சோழ மன்னர்கள் கால்பதித்துள்ளனர்.

இந்த வகையில் ராஜ ராஜ சோழன் மலேசியாவிற்கு வந்ததாக குறிப்பிட்ட சரித்திரம் இல்லை.

ஆனால், அவரது மகன் ராஜேந்திர சோழன் கடாரம் (மலேசியா) மீது படையெடுத்ததாக குறிப்புகள் உள்ளன.

கடாரம் என்பது மலேசியாவின் தென்பகுதியில் உள்ள கெடா மாநில மாகும் .

அந்த வரலாறுகளை இளையோர் மத்தியில் நினைவூட்டவும் இந்த போட்டி நடத்துவதாக லிங்கேஸ்வரன்  அண்ணாமலை கூறினார்.

இங்கு நடத்தப்பட்ட இந்தப் போட்டி முதல் முறையாக நடத்தபட்ட இப்போட்டி 15 வயதிற்கும் குறைவான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதால் தொடர்ந்து இப்போட்டியை நடத்த ஆர்வம. கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வேளையில் இப்போட்டி நடத்த ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியை கூறிக்கொண்டார்.

இப்போட்டியில் பேராக்கைச் சேர்ந்த kelab bola speak Young pro குழு முதல் இடத்தை பிடித்தது.

இரண்டாவது இடத்தை பினாங்கு கருடா கால்பந்து குழு வாகை சூடியது.

மூன்றாவது இடத்தை பேரா எம். கே. யனைட்டட் குழு, சிலாங்கூர் GGG SOCCER ACADEMY வாகை சூடின.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset