செய்திகள் விளையாட்டு
ஸ்பெயின் கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்: நீதி அமைச்சர் கடும் கண்டனம்
மாட்ரிட்:
ஸ்பெயின், எகிப்து நாடுகளுக்கு இடையிலான சர்வதேச நட்புமுறை கால்பந்து போட்டியின் போது, ஒரு சில ஆதரவாளர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு, இனவெறி முழக்கங்களை எழுப்பியதற்கு ஸ்பெயின் நாட்டின் நீதி அமைச்சர் பெலிக்ஸ் பொலானோஸ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவில் நடைபெற்ற இந்தப் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்த போதிலும், ரசிகர்களின் இத்தகைய அநாகரிகமான செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது 'எக்ஸ்' (X) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பொலானோஸ், இனவெறி கலந்த இழிச்சொற்களும் முழக்கங்களும் ஒரு சமூகமாக நம் அனைவரையும் தலைகுனியச் செய்வதாக வேதனை தெரிவித்தார்.
இத்தகைய வெறுப்புணர்வைத் தூண்டும் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் என்றும் அவர் சாடினார்.
மேலும், தீவிரவாதப் போக்குடையவர்கள் எங்கு வேண்டுமானாலும் வெறுப்புணர்வைப் பரப்பத் துடிப்பார்கள் என்றும், இத்தகைய அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பவர்கள், மறைமுகமாக அந்தக் குற்றத்திற்கு உடந்தையானவர்களே என்றும் அவர் எச்சரித்தார்.
விளையாட்டுத் துறையில் இனவாதத்திற்கு இடமில்லை என்பதை வலியுறுத்திய அவர், இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 4:15 pm
கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி
April 1, 2026, 11:48 am
மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி
March 31, 2026, 8:56 am
சிகிச்சை விவகாரத்தை நபோலி ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்: லுகாகு
March 31, 2026, 8:19 am
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டி: ஜெர்மனி வெற்றி
March 30, 2026, 4:24 pm
ஆசியக் கிண்ணக் கால்பந்து: மலேசியாவை வீழ்த்தத் துடிக்கும் வியட்நாம்
March 30, 2026, 9:25 am
கானாவை எதிர்கொள்ள மாற்றியமைக்கப்பட்ட ஜெர்மனி அணி
March 30, 2026, 9:21 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 29, 2026, 10:19 am
