நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி

கோலாலம்பூர்: 

தலைநகர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் வரும் ஏப்ரல் 4,  5-ஆம் தேதிகளில் 'முதலாவது மஸ்ஜித் இந்தியா ஓபன் சதுரங்கப் போட்டி 2026' (1st Masjid India Open Chess Tournament 2026) மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக் கிண்ணத்திற்காக (Datuk Wira Shahul Dawood Trophy) இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்று டத்தோ சிராஜ் கூறினார்.

இந்தப் போட்டியில், வெற்றியாளர்களுக்கு மொத்தமாக RM8,000 ரிங்கிட் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

கோலாலம்பூர் ஜாலான் போனஸில் அமைந்துள்ள 'பிடி80 வணிக மையம்' (Menara PT80 DBKL) வளாகத்தின் 14-ஆவது மாடியில் இந்தப் போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 4-ஆம் தேதி சனிக்கிழமை அன்று 8, 12, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளும், ஏப்ரல் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திறந்தநிலைப் பிரிவினருக்கான (Open Category) போட்டிகளும் நடைபெறும்.

காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்தப் போட்டிகள் நடத்தப்படும்.

பங்குபெறும் வீரர்களுக்கு நுழைவுக்கட்டணமாகத் திறந்தநிலைப் பிரிவினருக்கு RM50 ரிங்கிட்டும், வயது வாரியானப் பிரிவினருக்கு RM40 ரிங்கிட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாற்றத்திறனாளி (OKU) வீரர்களுக்கு நுழைவுக்கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு தனியாக 3 சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், போட்டியில் பங்கேற்கும் முதல் 200 வீரர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, 5 அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் காத்திருக்கின்றன.

திறந்தநிலைப் பிரிவில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு RM1,000 ரிங்கிட் ரொக்கப்பரிசுடன் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலதிக விபரங்களுக்கு ஹமிட் (019-3158098) அல்லது சிராஜ் (010-5499916) ஆகியோரை வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset