செய்திகள் விளையாட்டு
இத்தாலி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறத் தவறியது: போஸ்னியா சாதனை
ஷெனிகா:
இத்தாலி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெறத் தவறியது.
பிலினோ போல்ஜா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் போஸ்னியா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பரபரப்பான சூழலில் நடைபெற்ற பெனால்டியில் இத்தாலி அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் போஸ்னியா அணியிடம் தோல்வி கண்டனர்.
இந்த தோல்வியை தொடர்ந்து இத்தாலி அணியினர் மூன்றாவது முறையாக உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறத் தவறினர்.
அதே வேளையில் போஸ்னியா அணியினர் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று சாதித்துள்ளனர்.
மற்ற ஆட்டங்களில் சுவீடன், துருக்கி, செக் குடியரசு ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 8:56 am
சிகிச்சை விவகாரத்தை நபோலி ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்: லுகாகு
March 31, 2026, 8:19 am
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டி: ஜெர்மனி வெற்றி
March 30, 2026, 4:24 pm
ஆசியக் கிண்ணக் கால்பந்து: மலேசியாவை வீழ்த்தத் துடிக்கும் வியட்நாம்
March 30, 2026, 9:25 am
கானாவை எதிர்கொள்ள மாற்றியமைக்கப்பட்ட ஜெர்மனி அணி
March 30, 2026, 9:21 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 29, 2026, 10:19 am
இங்கிலாந்து பயிற்சி முகாமில் இருந்து எட்டு வீரர்கள் வெளியேறினர்
March 28, 2026, 9:51 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
March 28, 2026, 9:50 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இங்கிலாந்து சமநிலை
March 27, 2026, 9:30 am
