நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி

போனஸ் அயர்ஸ்:

அனைத்துலக நட்பு முறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் வெற்றி பெற்றனர்.

உலகக் கிண்ணத்தை  தக்கவைக்கும் முயற்சியைத் தொடங்குவதற்கு முன்பு, சொந்த மண்ணில் நடந்த தங்களின் கடைசி நட்பு ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் ஜாம்பியாவை அணியை சந்தித்தன.

இதில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து, ஒரு கோலுக்கு உதவியும் செய்து, ஜாம்பியாவை 5-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி வீழ்த்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை மௌரிடானியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுமாராக விளையாடிய பிறகு, மீண்டும் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசைக்குத் திரும்பிய மெஸ்ஸி தனது தாக்கத்தைத் தொடர்ந்தார்.

லியோனல் மெஸ்ஸியை தவிர்த்து ஜூலியன் அல்வாரேஸ், நிகோலஸ் ஒத்மான்டி, வெலடின் பார்கோ ஆகியோர் அர்ஜெண்டினா அணிக்கு கோல்களை அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset