செய்திகள் விளையாட்டு
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
வார்சாவ்:
உலகக் கிண்ண போட்டிக்கு போலந்து தகுதி பெறத் தவறியதை அடுத்து, லெவன்டோவ்ஸ்கி ஓய்வு பெறுவது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
2026 உலகக் கிண்ண போட்டிக்கு போலந்து அணி தகுதி பெறத் தவறியது.
இதை அடுத்து, அனைத்துலக கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என அந்நாட்டின் கேப்டன் ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
தகுதிச் சுற்றில் ஸ்வீடனிடம் 2-3 என்ற கோல் கணக்கில் போலந்து தோல்வியடைந்து.
இதனால் 37 வயதான இந்த முன்கள வீரர் வெளிப்படையாகவே ஏமாற்றமடைந்தார்.
இந்தத் தோல்வி, உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறும் அவர்களின் வாய்ப்பை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஆட்டத்திற்கு பின் பல மணிநேரங்களுக்குப் பிறகு, லெவன்டோவ்ஸ்கி, சாரா பிரைட்மேன் ஆண்ட்ரியாவின் 'டைம் டு சே குட்பை' பாடலின் இசையோடு மைதானத்தை விட்டு வெளியேறும் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இது அவரது எதிர்காலம் குறித்த யூகங்களுக்கு வழிவகுத்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
April 5, 2026, 8:49 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது அர்செனல்
April 4, 2026, 12:10 pm
தோமஸ் கிண்ணம் 2026: லீ ஜி சியாவின் பங்கேற்பு கேள்விக்குறி
April 4, 2026, 9:44 am
காயத்தில் இருந்து மீண்ட ரொனால்டோவின் அதிரடியால் அல் நசர் அணி வெற்றி
April 4, 2026, 9:42 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்
April 2, 2026, 11:34 am
