நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்

ரோம்:

தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, இத்தாலி கால்பந்து சம்மேளத்தின் தலைவர் கேப்ரியல் கிரவினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் போஸ்னியாவிடம் பெனால்டி கோல் கணக்கில் தோல்வி கண்டது.

இதைய் தொடர்ந்து, 2018 முதல் சம்மேளத்துக்குத் தலைமை தாங்கி வந்த கிரவினா, அரசாங்கம் உட்பட பல தரப்பிலிருந்து கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டார்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜூன் 22 அன்று ஒரு சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெறும். 

அதேவேளையில், இத்தாலி கால்பந்தின் நிலை குறித்து கிரவினா ஏப்ரல் 8 அன்று நிர்வாக குழுவிடம் விளக்கம் அளிக்க உள்ளார்  என்று சம்மேளம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலி கடைசியாக 2014-ஆம் ஆண்டில் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது.

அதேசமயம் உலக அரங்கில் அவர்களின் கடைசி வெற்றி 2006ஆம் ஆண்டில் கிண்ணத்தை வென்றதாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset