செய்திகள் தொழில்நுட்பம்
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
சிங்கப்பூர்:
Takata airbag கோளாற்றால் பாதிக்கப்பட்ட 3,200 வாகனங்களை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
ஆணையம் வாகன வர்த்தகர்களுடன் இணைந்து செயல்பட்டு அந்த வாகனங்களைக் கண்டுபிடித்தது.
வாகன விபத்தின்போது அந்த airbag வெளியானதில் 57 வயதுத் மைக்கல் ஓங் கொங் மெங் என்பவர் உயிரிழந்தார்.
airbagஇல் கோளாறு இருப்பதால் அவரது Honda காரை மீட்டுக்கொள்ள அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் காரை வாங்கிய நிறுவனம்மூடப்பட்டதால் அவருக்கு அந்தத் தகவல் சென்றுசேரவில்லை.
அடையாளம் காணப்பட்டுள்ள 3,200 வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும் என்று சிங்கப்பூர் ஆணையம் கூறியது. வாகனத்தைச் சீர் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன நிறுவனங்கள் ஏற்கனவே சுமார் 212,000 வாகன உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்துவிட்டன.
கார்களை நம்பகமான நிறுவனங்களிடமிருந்து வாங்குமாறு சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
