செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் அதிகமானோரை வேலைக்குச் சேர்க்கும் Revolut நிறுவனம்
சிங்கப்பூர்:
Revolut நிதித் தொழில்நுட்ப நிறுவனம் சிங்கப்பூரில் அதன் ஊழியரணியை மும்மடங்காக்கத் திட்டமிடுகிறது. அடுத்த மூவாண்டில் அது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு ஆசியா முழுதும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முனைகிறது Revolut நிறுவனம்.
2024லிருந்து சென்ற ஆண்டு (2025) வரை Revolut சிங்கப்பூரில் அதன் ஊழியர்களை இரட்டிப்பாக்கியது.
அடுத்த மூவாண்டில் 300க்கும் அதிகமானோருடன் ஊழியரணியை மும்மடங்காக்க நிறுவனம் திட்டமிடுகிறது.
உற்பத்திப் புத்தாக்கம், வட்டார விரிவாக்கம் முதலியவற்றில் கவனம் செலுத்தக் கூடுதல் ஊழியர்கள் உதவுவர் என்று Revolut நிறுவனம் கூறியது.
Revolut நிறுவனம் நாணயப் பரிமாற்றம், வர்த்தகச் சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது.
சிங்கப்பூரில் அதன் விரிவாக்கத்திற்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் EDBI முதலீட்டு நிறுவனமும் ஆதரவு அளிக்கின்றன.
Revolut நிறுவனத்தின் மதிப்பு சுமார் 95 பில்லியன் வெள்ளி.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
