செய்திகள் இந்தியா
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
புது டெல்லி:
நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
இந்தியாவில் Cloud சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரிவிலக்கு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பங்குகளை திருப்பி வாங்கும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுக்கான பங்கீட்டை 41% ஆக தக்கவைத்துக் கொள்ளுமாறு 16-வது நிதிக் குழு அளித்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. 2026-27 நிதியாண்டுக்காக மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
டிசிஎஸ் தொடர்பான அறிவிப்புகள்:
மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தால் ஒரு தனிநபருக்கு வழங்கப்படும் எந்தவொரு வட்டிக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இது தொடர்பான எந்தவொரு டிடிஎஸ் பிடித்தமும் ரத்து செய்யப்படும்.
வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்கள் (overseas tour program package) விற்பனை மீதான டிசிஎஸ் வரியை, தற்போதுள்ள 5% மற்றும் 20% என்பதிலிருந்து, எந்தவித தொகை வரம்பும் இல்லாமல் 2% ஆகக் குறைக்கப்படும்.
தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டம் (LRS) எனப்படும் திட்டத்தின் கீழ், கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான டிசிஎஸ் (TCS) வரியை 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.
20%-ல் இருந்து 10% ஆக குறையும் இறக்குமதி வரி
தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி அமைப்பை முறைப்படுத்தும் வகையில், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் வரி விதிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சுங்க வரியை 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்படும்.
2030-ஆம் ஆண்டுக்குள் முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யவும், ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கவும், இந்திய முந்திரி மற்றும் இந்திய கோகோவை உலகளாவிய பிராண்டுகளாக மாற்றவும் இந்திய முந்திரி மற்றும் கோகோவுக்கு ஒரு பிரத்யேக திட்டத்தம் கொண்டுவரப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
January 31, 2026, 11:50 pm
