நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐஜேஎம் தொடர்பான விசாரணையில் கிட்டத்தட்ட 15.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 55 கணக்குகளை எம்ஏசிசி முடக்கியது

புத்ரா ஜெயா:

ஐஜேஎம் தொடர்பான விசாரணையில் கிட்டத்தட்ட 15.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 55 கணக்குகளை எம்ஏசிசி முடக்கியுள்ளது.

எம்ஏசிசி அதிகாரிகள் நேற்று ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் அலுவலகத்தில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

கட்டுமானம், சொத்து மேம்பாடு, உள்கட்டமைப்பு, தொழில்துறை நிறுவனத்தின் தனிப்பட்ட குடியிருப்புகள், அலுவலகங்கள் உட்பட நான்கு இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

எம்ஏசிசி சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு ஐஜேஎம்மின்  இரண்டு உயர் நிர்வாக நபர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த சோதனையும் நடத்தப்பட்டது.

இந்த சோதனையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 15.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 55 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக ஐஜேஎம் கார்ப்பரேஷனின் இரண்டு உயர் நிர்வாக அதிகாரிகள் உட்பட ஒன்பது நபர்கள், 2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி திட்டம் தொடர்பாக அறிக்கைகளை வழங்க உள்ளதாக எம்ஏசிசி  தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

மேலும் டான்ஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நிறுவனத்தின் உயர் நிர்வாகமும் ஒரு ஆலோசகரும் இந்த வழக்கில்  முக்கிய நபர்களாக அடையாளம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset