நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பதவிக்கால வரம்பை ஒரு நிபந்தனையுடன் ஆதரிக்க தேசியக் கூட்டணி தயார்: ஹம்சா

கோலாலம்பூர்:

பிரதமரின் பதவிக்கால வரம்பை ஒரு நிபந்தனையுடன் ஆதரிக்க தேசியக் கூட்டணி தயாராக உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணை பதவிக்காலங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தும் புத்ராஜெயாவின் முன்மொழிவை ஆதரிக்க எதிர்க்கட்சி தயாராக உள்ளது.

ஆனால் ஒரு நிபந்தனையுடன் இது ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒரு பிரதமர் ஒரே நேரத்தில் நிதி இலாகாவை வைத்திருப்பதைத் தடுக்கும் ஒரு நிபத்தனையுடன் பதவிக்கால வரம்பையும் சேர்க்க விரும்புவதாக அவர் விளக்கினார்.

பிரதமரின் பதவிக் காலத்தின் நீளத்தைப் பார்ப்பதை விட, பிரதமர்,  நிதியமைச்சரின் பொறுப்புகளைப் பிரிக்கும் திட்டம் மிக முக்கியமானது.

ஆக பிரதமர் பதவிக்கு இரண்டு பதவிக்கால வரம்பை ஆதரிப்பதில் தேசியக் கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் நிபந்தனைகளுடன் பிரதமர் நிதியமைச்சர் பதவியை வகிக்க முடியாது என்று ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset