செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியில் மஇகா இணைவதற்கு உச்சமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது?
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியில் மஇகா இணைவதை அக் கூட்டணியின் உச்சமன்ற கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தேசியக் கூட்டணி உச்சமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மஇகாவின் தேசியக் கூட்டணியில் சேருவதற்கான விண்ணப்பத்தை அங்கீகரித்ததாகக் கூறப்படுகிறது.
இது எதிர்க்கட்சி கூட்டணியின் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.
கடந்த டிசம்பர் 9 அன்று நடைபெற்ற தேசியக் கூட்டணியின் உயர் தலைமைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக பெர்சத்து, தேசியக் கூட்டணியைச் சேர்ந்த மூன்று பேர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
அக்கூட்டத்தில் மஇகா தலைமை சமர்ப்பித்த கடிதம், மஇகா தலைமையுடனான சந்திப்பு குறித்து தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசினிடம் நீண்ட விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள கூட்டணி வலுப்படுத்துவதில் மஇகா, பிற அரசியல் கட்சிகளின் முக்கியத்துவத்தை டான்ஶ்ரீ மொஹைதின் வலியுறுத்தினார்.
மஇகாவை ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய காரணம், பல நகர்ப்புற இடங்களில் தீர்க்கமானதாக இருக்கும் இந்திய சமூகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவை பிஎன் ஈர்க்க உதவுவதாகும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் எதிர்ப்பையும் மீறி, மஇகாவை ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ள கூட்டம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
