நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவருக்காகத் தனது காலணியைத் தியாகம் செய்த ஆசிரியர்

ஷா ஆலம்:

2026 கல்வியாண்டின் மூன்றாவது வாரத்தில், ஆசிரியர்கள், மாணவர்களைச் சுற்றிய பல்வேறு நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில், கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தேசியப் பள்ளி ஆசிரியரான அக்ரம் இஷாக் பகிர்ந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிக்கு பழுதடைந்த செருப்பை அணிந்து வந்த தனது மாணவனின் நிலையை அவர் வெளிப்படுத்தினார்.

அந்த மாணவன் தாயை இழந்த அனாதை என்றும், பாதுகாப்பு காவலராக பணிபுரியும் தந்தைக்கு குறைந்த வருமானம் மட்டுமே இருப்பதால், குடும்பத்தைச் சமாளிக்க சிரமம் இருப்பதாக ஆசிரியர் தெரிவித்தார்.

மூன்று சகோதரர்களும் தாத்தாவின் வீட்டில் வசிப்பதாகவும், அவர்கள் கால்பந்து விளையாட்டில் திறமை பெற்றவர்கள் என்பதால் பள்ளி விளையாட்டு அணிக்காகத் தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார்.

மாணவன் தாழ்வு மனப்பான்மை அடையாமல், விளையாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்பதற்காக, தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு காலணியை அந்த மாணவனுக்கு வழங்கியதாக அக்ரம் தெரிவித்தார்.

“இந்த காலணி என்னுடையது, அணிந்துக் கொள்ளுங்கள். நன்றாகப் படியுங்கள்,” என அவர் கூறினார்.

இந்தச் செயல் கல்வியைத் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையையும் கவனிக்கும் ஆசிரியரின் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டினர்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset