செய்திகள் வணிகம்
இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவால் ரூ.10 லட்சம் கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி
புதுடெல்லி:
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கட்டுக்கடங்காத வெளிநாட்டு நிதி வெளியேற்றங்களுக்கு மத்தியில், பிஎஸ்இ சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 1,066 புள்ளிகள் சரிந்தது.
நேற்று முன்தினம் முதல் ஏற்பட்டுள்ள சரிவுடன் கணக்கிடுகையில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் அல்லது 1.28 சதவீதம் சரிந்து 82,180.47 நிலைபெற்றது.
பகலில் 1,235.6 புள்ளிகள் அல்லது 1.48 சதவீதம் சரிந்து 82,010.58 ஆக இருந்தது. இதனால் பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.9,86,093.96 கோடி குறைந்து ரூ.4,55,82,683.29 கோடியாக குறைந்துள்ளது.
மொத்தம் 3,503 பங்குகள் சரிந்தன. 780 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 119 பங்குகள் மாறாமல் இருந்தன.
இதனால் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.9.86 லட்சம் கோடி இழப்பை சந்தித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2026, 7:04 pm
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணவீக்கம் சரிந்துள்ளது: அர்மிசான்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
