செய்திகள் வணிகம்
பிரபல வணிக சந்தைகளின் நுழைவினால் பாதிக்கப்படும் சிறு தொழில் வியாபாரிகள்: ரமலான் சந்தை விவாதம்
புத்ராஜெயா:
ரமலான் சந்தைகளில் பெரிய அளவிலான உணவு, பானம் சந்தைகள் பங்கேற்பது, நீண்ட காலமாக சிறுதொழில் வியாபாரிகளின் வணிகச் சூழலை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
நுகர்வோர் பார்வையில், இந்நிறுவனங்கள் குறைந்த விலையில், உணவு பாதுகாப்பு மீதான நம்பிக்கையை வழங்குகின்றன. இது திறந்த சந்தை முறைக்கு ஏற்றதாகவும், அதிக விருப்பங்களை அளிப்பதாகவும் கருதப்படுகிறது.
ஆனால் குறைந்த முதலீட்டில் செயல்படும் சிறுதொழில் வியாபாரிகள், அதிக மூலப்பொருள் செலவுகளையும், ரமலான் மாத கால விற்பனையை மட்டுமே சார்ந்திருப்பதால், இந்த போட்டியில் சமநிலை இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.
மலேசியா கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் சிறுதொழில் நிறுவாக இயக்குநர் டாக்டர் முஹமத் இக்வான் அசீஸ், இது கிராமப்புற அணியுடன் மேம்பட்ட அணியை போட்டியிடச் செய்வதற்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டார். பெரிய நிறுவனங்கள் முதல்தொகை வலிமை, பெருமளவு உற்பத்தி சலுகை, தீவிர விளம்பர உத்திகளை பயன்படுத்துவதால் போட்டித் திறன் அதிகரிக்கிறது என்றார்.
அதேவேளை, இந்த நிலைமை சிறுதொழில் வியாபாரிகளுக்கு வணிக அடையாளம், விலை நிர்ணயம், வாடிக்கையாளர் அணுகுமுறை போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாய்ப்பாகவும் அமையலாம் என அவர் தெரிவித்தார். ரமலான் சந்தை நிர்வாகத்தில் விலை அமைப்பு, விற்பனை பிரிவுகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறுதொழில் வியாபாரிகளின் தனித்துவமும், பாரம்பரிய சுவைகளும் இன்னும் மக்களை ஈர்க்கும் சக்தி கொண்டவை என்றும் டாக்டர் முஹமத் இக்வான் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
