செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
கோலாலம்பூர்:
இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சிறிய உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியிருந்தாலும், அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களால் அது தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீட்டு சாதனமாக கருதப்படும் அமெரிக்க டாலரையே வர்த்தகர்கள் தொடர்ந்து விரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு உள்ளூர் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9390/9535 என்ற விகிதத்தில் வர்த்தகம் செய்யப்பட்டது. நேற்று நிறைவில் இது 3.9440/9495 ஆக இருந்தது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கத்தை உலக நாடுகள் கவனித்து வருவதால், அமெரிக்க டாலர் குறியீடு (DXY) தொடர்ந்து உயர்ந்து வருவதாக மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
“மத்திய கிழக்கின் இறக்குமதிகளை நம்பியுள்ள சீனா அந்தப் பகுதியில் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்க அனைத்து தரப்புகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. அதே சமயம், எண்ணெய், எரிவாயு போக்குவரத்தைத் தொடரச் செய்ய டேங்கர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
“அபாயத்தைத் தவிர்க்கும் சூழ்நிலையால் வர்த்தகர்கள் அமெரிக்க டாலரைப் பாதுகாப்பான தங்குமிடமாகத் தேடுவதால், ரிங்கிட் தொடர்ந்து பலவீனமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் முஹம்மத் அப்ஸானிசம் கூறினார்.
தொடக்கத்தில், முக்கிய நாணயங்களின் தொகுப்புக்கு எதிராக ரிங்கிட் கலவையான போக்கைக் காட்டியது.
ஜப்பான் யென்னுக்கு எதிராக அது 2.5010/5048 இருந்து 2.4964/5059 ஆக உயர்ந்தது. யூரோவுக்கு எதிராக 4.5778/5842 இருந்து 4.5736/5904 ஆக சிறிய உயர்வைக் கண்டது. இருப்பினும் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.2451/2524 இருந்து 5.2590/2783 ஆக வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் பெரும்பாலும் சரிவைக் கண்டது. இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 233.7/234.2 இருந்து 233.4/234.4 ஆக சுமார் நிலையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் பேசோவுக்கு எதிராக 6.74/6.76 இருந்து 6.75/6.76 ஆக வீழ்ச்சியடைந்தது. தாய் பாட்-க்கு எதிராக 12.4401/4637 இருந்து 12.4652/5222 ஆக தளர்வடைந்தது.
இதற்கிடையில், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.0863/0909 இருந்து 3.0841/0959 ஆக மேம்பட்டது.
மேலும், இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 23.33 காசாக விற்பனையில் உள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
