செய்திகள் வணிகம்
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
டெஹ்ரான்:
எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.
மூன்றரை ஆண்டில் வரலாறு காணாத விலை உயர்வு அது.
போர் தொடங்குவதற்குமுன் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்குச் சுமார் 67 டாலராக இருந்தது.
WTI ரக எண்ணெய் 20 விழுக்காடு ஏற்றம் கண்டு 109 டாலரைத் தாண்டியது.
அனைத்துலக எண்ணெய் விலையின் குறியீடாகக் கருதப்படும் Brent - 19 விழுக்காடு உயர்ந்து 110 டாலரைக் கடந்தது.
போரினால் எண்ணெய் விலை ஏறும்நிலையில் பங்குவிலை இறங்குமுகமாக உள்ளது.
ஆசியப் பங்குச் சந்தை இன்று ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய, ஜப்பானியப் பங்குச் சந்தைகளில் இன்று (9 மார்ச்) காலை ஆரம்பப் பரிவர்த்தனையில் படுவீழ்ச்சி.
தென்கொரியாவின் Kospi குறியீடு 6.5 விழுக்காட்டுக்குமேல் சரிந்தது.
நிதிப் பங்குகள் ஐந்து விழுக்காட்டுக்குமேல் சரியத்தொடங்கியதும் பரிவர்த்தனை ஐந்து நிமிடத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது.
ஜப்பானிலும் அதே கதை நீடித்தது. டோக்கியோவில் Nikkei குறியீடு 5.8 விழுக்காடு சரிந்தது.
அனைத்துலக எண்ணெய் விலையின் குறியீடாகக் கருதப்படும் Brent - 19 விழுக்காடு உயர்ந்து 110 டாலரைக் கடந்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது Truth Social தளத்தில் எண்ணெய் விலையேற்றம் பற்றிப் பதிவிட்டார்.
ஈரானின் அணுவாயுத மிரட்டலை அகற்றக் கொடுக்கவேண்டிய சிறிய விலை அது என்று அவர் சொன்னார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
