செய்திகள் வணிகம்
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு மதிப்பு 426.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும், இது நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாகும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு அதிகரிப்பாகும். மொத்தம் 8,390 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 902 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதில் உள்நாட்டு முதலீடு 219.6 பில்லியன் ரிங்கிட் என பதிவு செய்யப்பட்டு, நாட்டின் மொத்த முதலீட்டில் 51.5 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீடு 20.9 விழுக்காடு உயர்ந்து 207.1 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
இந்த சாதனை, அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகும் என்றும், முதலீடுகள் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப பரிமாற்றம், மக்களின் வளம் அதிகரிக்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், இந்த முதலீட்டு சாதனை உலக நாடுகள் மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மை, வளர்ச்சி திசையை நம்பிக்கையுடன் பார்க்கின்றன என்பதற்கான சான்றாகும் என்றும் அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
