செய்திகள் வணிகம்
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
கோலாலம்பூர்:
மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா (BNM) இன்று நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் (OPR) 2.75 சதவீதமாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவான வலுவான முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உள்நாட்டு தேவையின் நிலைத்தன்மை, குறைந்து வரும் பணவீக்கம், வலுவான தொழில்நுட்ப முதலீடுகள், நிதி கொள்கை ஆதரவுகளால் முன்னேற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக BNM வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பிக்கப்பட்டுள்ளது.
“எனினும், சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்கள் உலக பொருளாதாரத்தில் அசாதாரண நிலையை அதிகரித்துள்ளன. அந்த மோதல்களின் கால அளவும் தீவிரமும் உலக பொருளாதாரத்தின் மீது ஏற்படும் தாக்கத்தைத் தீர்மானிக்கும்,” என்றும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களும் உலக நிதி சந்தைகளில் காணப்படும் அதிக அலைபாய்ச்சல்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் அபாயம் அதிகரித்துள்ளதாக BNM தெரிவித்துள்ளது.
“மேலும், அதிகரிக்கக்கூடிய சுங்க வரிகள் தொடர்பான தொடர்ந்த கவலைகளும், நிதி சந்தைகளில் காணப்படும் உயர்ந்த மதிப்பீடுகளும் இன்னும் நிலவுகின்றன,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொழில்நுட்ப செலவினங்கள் அதிகரிப்பது, பொருளாதார நடவடிக்கைகளில் சுங்க வரிகளின் தாக்கம் மிதமாக இருப்பது, முன்னேற்றமான நாடுகளில் வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகள் போன்ற காரணிகளால் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
