செய்திகள் வணிகம்
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கோலாலம்பூர்:
மார்ச் 5 முதல் 11 வரை மலேசிய தீபகற்பத்தில் டீசல் விலை லிட்டருக்கு 8 சென் அதிகரித்து RM3.12 ஆக உயரும். அதே நேரத்தில் சபா, சரவாக், லபுவான் பகுதிகளில் டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு RM2.15 ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுட்டள்ளது.
RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 சென் அதிகரித்து RM3.25 ஆக விற்கப்படும்.
இதற்கிடையில், மானியமில்லா RON95 பெட்ரோல் விலை அதே காலப்பகுதியில் 8 சென் அதிகரித்து லிட்டருக்கு RM2.67 ஆக விற்கப்படுகிறது என நிதி அமைச்சு புதன்கிழமை, மார்ச் 4 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Budi95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு RM1.99 ஆகவே தொடரும்.
உலக எண்ணெய் சந்தையில் நடைபெறும் தற்போதைய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு RON97, RON95, டீசல் விலைகளை அரசாங்கம் தொடர்ந்து பரிசீலித்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும். அதே நேரத்தில் விலை நிலைத்தன்மையை முக்கிய முன்னுரிமையாக வைத்திருக்கும் என நிதி அமைச்சு கூறியுள்ளது.
“உலகளாவிய கச்சா எண்ணெய் விலை போக்கை அரசாங்கம் தொடர்ந்து கவனமாக கண்காணிக்கும். மக்களின் நலன், வாழ்க்கைத் தரம் பாதுகாக்கப்படும் வகையில் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
