செய்திகள் வணிகம்
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றங்களால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும், அரசு RON95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு RM1.99 என தொடர்ந்து நிலைநிறுத்துமென அறிவித்துள்ளது.
உள்நாட்டு எரிசக்தி விலை தொடர்பான கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய தேவையில்லை என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசீர் தெரிவித்துள்ளார்.
“உலக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், RON95 இன் உள்நாட்டு விலை பாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி கூறியுள்ளார்.
“ஆகையால், பொருளாதார அமைச்சு நடப்பினை முறையாகக் கண்காணிக்கிறது. இருப்பினும், அது அரசு கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய உத்தேசம் ஏதுமில்லை.
“எமது நோக்கம் தற்போதைய நிலையைத் தொடர்வதாகும்,” என்று அவர் இன்று நடந்த 3-ஆம் ஆண்டு OGSE100 CEO மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இருப்பினும், பிரதமரின் உறுதியை நடைமுறைப்படுத்தும் முறைமை இன்னும் விரிவாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“மலேசியாவில், இலக்கு மானியங்களை நாங்கள் செயல்படுத்தி மக்களுக்கு நியாயமான விலைகளைப் பராமரிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் தேசிய பெட்ரோல் உதவித் தொகைச் செலவுக்கு விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
