நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் மாலுட் கப்பல் தளத்தில் தீ விபத்து: 3 பேரிகள் முற்றிலும் சேதம்

லங்காவி:

புக்கிட் மாலுட் பகுதியில் உள்ள கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் பராமரிப்பு பணிகளில் இருந்த மூன்று பேரிகள், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

நேற்று இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

நேற்று இரவு 9.46 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டதாக மண்டலம் 4 லங்காவி, கெடா தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைவர் முஹம்மது ஜம்ரி அப்துல் கனி தெரிவித்தார்.

“அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு, மீட்பு நிலையம் (BBP) பெர்சியாரன் புத்ரா நிலையத்திலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும், BBP லங்காவி நிலையத்திலிருந்து இரண்டு வாகனங்களும், மொத்தம் 23 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

“சம்பவ இடத்தை அடைந்தபோது, அருகருகே நங்கூரமிட்டிருந்த மூன்று பேரிகள் தீக்கிரையாகியிருந்தது கண்டறியப்பட்டது,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அவற்றில் இரண்டு பேரிகள் சுமார் 80 சதவீதம் அளவுக்கு எரிந்து சேதமடைந்து, சுமார் 50 மீட்டர் தூரம் தீ பரவியிருந்தது. மற்றொரு பேரி சுமார் 5 சதவீதம் அளவில் தீக்கிரையானது.

“அருகில் நங்கூரமிட்டிருந்த மேலும் இரண்டு பேரிகள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டன. இன்னொரு பேரி இழுத்து வெளியேற்றப்பட்டு மிதக்கும் போயாவில் நிறுத்தப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

“அந்த நடவடிக்கையில், தீக்கிரையான ஒரு பேரி மீனவர்கள் படகின் உதவியுடன் கரைக்கு இழுத்து வரப்பட்டது. மற்றொரு பேரி கடுமையாக எரிந்த நிலையில் தானாகவே தீ அணையும் வரை விடப்பட்டது,” என்றார் அவர்.

இத்தீ விபத்து இரவு 11.07 மணியளவில் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, நடவடிக்கைகள் அதிகாலை 2.10 மணிக்கு முடிவடைந்ததாக அவர் கூறினார்.

“தீ விபத்திற்கான காரணமும், மொத்த சேத மதிப்பும் தற்போது விசாரணையில் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset