நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தையும் இலக்காக கொண்ட 10,422 பயிற்சித் திட்டங்கள்; நியோஸ் வாயிலாக வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

பாங்கி:

இந்திய சமூகத்தையும் இலக்காக கொண்ட 10,422 பயிற்சித் திட்டங்கள் நியோஸ் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

நியோஸ் எனப்படும் வேலையிட சுகாதார பாதுகாப்பு இலாகாவிற்கு இன்று பணி நிமித்தமாக  வருகையை மேற்கொண்டேன்.

நியோஸ் தலைவர் சோங் ஜியான் ஜென், நிர்வாக இயக்குநர் டத்தோ ஹாஜி அயோப் சாலே ஆகியோர் இவ்விலாகா குறித்த முழுமையாக விளக்கினர்.

இவ்வாண்டு நியோஸ் வாயிலாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பாக  இந்திய சமூகம், சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்களை இலக்காக கொண்டு நியோஸ் வாயிலாக 10,422 பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இத்திட்டங்களின் வாயிலாக கிட்டத்தட்ட 210,510 பேர் பயன் பெறவுள்ளனர்.

சமூக மக்களிடையே உருமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் வேலையிட பாதுகாப்புகளை வலுப்படுத்த 921 ஆலோசனை திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

455 தகவல் பரப்புதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

செயல்திறன், ஒருமைப்பாடு,  வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த
இலக்கவிகல் தளத்தில் நிதி, கொள்முதல், மனித வளங்கள்,  அறிக்கையிடல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான இஆர்பி அமைப்பை செயல்படுத்தப்படும்.

மரினா 3.0 (மலேசிய வேலையிட சுகாதார பாதுகாப்பு ஆராய்ச்சி முயற்சி) திட்டத்தின் தொடக்கம் 2026-2030 வரை ஆராய்ச்சியின் கவனம்  திசையை தீர்மானிக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வேலையிட சுகாதார பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியின் திசை, கவனத்தை தீர்மானிக்க மரினா 3.0 முக்கியமானது.

உள்ளூர், அனைத்துலக தொழில்,  நிபுணர்களின் உள்ளீட்டின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும்.

இறுதியாக நியோஸ் மூலம் இயக்கப்படும் அனைத்து முயற்சிகளும் இந்த நாட்டில் தொழில் பாதுகாப்பு, சுகாதார கலாச்சாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset