செய்திகள் மலேசியா
தொழுகையில் இருந்த பெண்ணைத் தொந்தரவு செய்த மர்மநபர்: போலிஸ் தீவிர தேடல்
செகாமாட்:
இங்கு உள்ள புக்கிட் சிப்புட் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெண் தொழுகையாளரை நோக்கி ஆபாச செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு நபரைப் போலிஸ் தேடி வருகிறது.
நேற்று காலை 11.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவர் துஹா தொழுகை செய்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை அணுகியதாகக் கூறப்படுகிறது.
அரை நிர்வாண நிலையில் இருந்த அந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி ஆபாசமானச் செயல்களில் ஈடுபட்டதாகச் செகாமாட் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் முஹம்மத் ஜுமசன்சாஹிர் சேக் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த நபரின் நடத்தையைக் கவனித்தவுடன் பாதிக்கப்பட்ட பெண் கத்திக்கொண்டே அங்கிருந்து ஓடி தப்பியதாக அவர் தெரிவித்தார்.
“நேற்று மாலை 6.29 மணிக்கு, இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணிடமிருந்து போலிசார் புகார் பெற்றனர்.
“சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகநபர் சுமார் 30 வயதுகளிலுள்ள மெலிந்த உடலமைப்பும் வெளிர் நிற சருமமும் கொண்ட வெளிநாட்டு நபராக இருக்கலாம் என நம்பப்படுகிறது,” என்றார் அவர்.
போலிசார் தற்போது அந்தச் சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377D இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
“இச்சம்பவம் தொடர்பாக தகவல் கொண்ட பொதுமக்கள் அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கும் அல்லது செகாமாட் மாவட்ட போலிஸ் தலைமையகம் (IPD Segamat) 07-9324222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
