செய்திகள் மலேசியா
ரமலானை முன்னிட்டு சமூகக் கடப்பாட்டுத் திட்டங்களுக்காக பெர்கேசோ 5 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
ரமலானை முன்னிட்டு சமூகக் கடப்பாட்டுத் திட்டங்களுக்காக பெர்கேசோ கிட்டத்தட்ட 5 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.
மனிதவள அமைச்சு பெர்கேசோ லிண்டுங் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
குறிப்பாக இந்த ரமலானை முன்னிட்டு பெர்கேசோ சமூகக் கடப்பாட்டு நடவடிக்கைகளுக்கான 5 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
பெர்கேசோ சந்தாதாரர்களுக்கான இழப்பீடுடன் ரமலான் உதவித் திட்டங்களுக்கான இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் LINDUNG Pekerja, LINDUNG Kerjaya, LINDUNG Kendiri, LINDUNG Kasih திட்டங்களைச் சேர்ந்த 15 சந்தாதாரர்களுக்கு 300,000 லட்சத்திற்க்கும் அதிகமான இழப்பீடுகள் இன்று வழங்கப்பட்டன.
குறிப்பாக முக்கிய பயனாளிகளில் ஒருவரான 28 வயதான ஐடில் ஹிதாயத் அப்துல் ஹாடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இடது கண்ணில் திசுக்களை இழந்ததால் 82,000 ரிங்கிட் நிரந்தர ஊனமுற்றோர் சலுகைகளை பெற்றார்.
கூடுதலாக இந்த விழாவில் 100 ஆதரவற்ற குழந்தைகலுக்கு அன்பளிப்பும், கிட்டத்தட்ட 40 தனித்து வாழும் தாய்மார்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் சமூகத்தின் நல்வாழ்வு தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான பெர்கேசோவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 10 அரசு சாரா இயக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் என 100,000 ரிங்கிட்டை வழங்கப்பட்டது.
பெர்கேசோவில் இந்த சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
எந்தக் குழுவும் சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான மனிதவள அமைச்சின் கொள்கைக்கு ஏற்ப உள்ளன என்று டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
