செய்திகள் மலேசியா
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
புத்ராஜெயா:
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் போதிலும், மலேசியாவில் உணவு விநியோகம், குறிப்பாக அரிசி தற்போது வரை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் முக்கிய உணவு இறக்குமதி பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், ஆசியான் நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளிலிருந்து கிடைப்பதால், மேற்கு ஆசிய மோதலால் உடனடி தாக்கம் இல்லை என்று அவர் விளக்கினார்.
அதே நேரத்தில், போர் நீண்ட காலம் நீடித்தால் உலக எண்ணெய் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்து செலவுகள், இறக்குமதி பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
நாட்டின் தயார்நிலை குறித்து அவர் கூறுகையில், அரசு முன்கூட்டியே அவசர மேலாண்மை நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போது நாட்டில் ஏழு மாதங்களுக்கு போதுமான அரிசி கையிருப்பு இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதற்கு முன், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவசாய அமைச்சகத்திற்கு வருகை தந்து அமைச்சகத்தின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
