செய்திகள் மலேசியா
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
ஷா ஆலம்:
குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு காவலர் இடத்தைப் பற்றிய தகராறு காரணமாக மேரு காவல் நிலையத்தில் திங்கட்கிழமை சண்டை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் காவல் துறை தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாகவும், சிலர் இரகசிய கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை எட்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் 28 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள்; மற்ற இருவர் 39 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்; மேலும் ஒருவர் 38 வயதுடையவர். இவர்களுக்கு எதிராக காவல் துறை தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தலைக்கவசம், இரும்புக் குழாய் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில், ஒரு சந்தேகநபர் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலர் கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வன்முறை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், ஒருவரை காவல்துறை தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பல குற்றச்சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:57 am
உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்
April 30, 2026, 11:06 am
கெப்போங்கில் அதிகாலை நேர்ந்த தீ விபத்து: 53 வயது நபர் படுக்கையிலேயே கருகி பலி
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
