செய்திகள் மலேசியா
பிரெஸ்மாவின் நோன்பு திறப்பு நிகழ்வில் 1,000 பேருக்கு உதவி; அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசாருடன் பேச்சுவார்த்தை: டத்தோ மோசின்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பிரெஸ்மா தலைவர் டத்தோ முகமத் மோசின் கூறினார்.
பிரெஸ்மாவின் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று செலயாங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் 50 ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
இவ்வாண்டு நிகழ்ச்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியின் ஆதரவுடன் நடைபெற்றது.
அதே வேளையில் மந்திரி புசார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் உதவிப் பொருட்களையும் எடுத்து வழங்கினார்.
இந்நிலையில் மந்திரி புசாரிடம் பிரெஸ்மா சார்பில் மகஜர் ஒன்று கொடுக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களின் நெருக்கடிகளால் உணவக உரிமையாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிரெஸ்மா தலைவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தது.
மந்திரி புசாரும் இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
அதே வேளையில் பெருநாளுக்கு பின் இந்த சந்திப்பு நடத்தப்படும் என மந்திரி புசார் வாக்குறுதி வழங்கினார்.
மந்திரி புசாரின் இந்த வாக்குறுதி உணவக உரிமையாளர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது என டத்தோ மோசின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
