செய்திகள் மலேசியா
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
கோத்தா பாரு:
கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி, மலேசிய இராணுவத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வீரர் முஹம்மத் ருஸ்யாரி ஜலானி, எட்டு பேருக்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நான்கு இராணுவ வீரர்கள், 16-ஆம் மலாய் இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, எட்டாவது காலாட்படை பிரிகேட் தளபதி, மலேசிய தரைப்படை, மலேசிய அரசாங்கம் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ஷஹாருதீன் முஹம்மத் தெரிவித்ததாவது, 2023 மார்ச் 13 முதல் 15 வரை நடந்த பயிற்சியின் போது, அணிவகுப்பு செயல்திறனில் திருப்தியில்லாததால் வயிற்றில் குத்தியதுடன் இராணுவத் தொப்பியாலும் துடைப்புக் கம்பியாலும் தலையில் அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் கடுமையான காயம் அடைந்த முஹம்மத் ருஸ்யாரி பலமுறை வாந்தி எடுத்த நிலையில் இராணுவ மருத்துவ மையத்திலும் பின்னர் மாச்சாங் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனை (HUSM) குபாங் கெரியனில், தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எட்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நீண்டகால மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டதுடன், மலாக்கா உள்ளிட்ட மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை காலத்தில் அவர் இராணுவ பணிகளை மேற்கொள்ள முடியாமல் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 10:24 am
புலாவ் அங்சாவில் பரபரப்பு: அழுகிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
April 21, 2026, 10:11 am
தாவாவ் சாலையில் பயங்கரம்: பிக் அப் வேன் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்
April 21, 2026, 10:04 am
வலைதளத்தில் பாலியல் ஆசை காட்டி மோசடி: RM27,580 ரிங்கிட்டைப் பறிகொடுத்த பொறியாளர்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
