நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து மாநாட்டில் நல்ல செய்தி கிடைக்கும்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியில் பிபிபி கட்சி தொடர்ந்து நீடிப்பது குறித்து பேராளர் மாநாட்டில் நல்ல செய்திகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபால மோகன் கூறினார். 

பிபிபி கட்சியின் ஆண்டு பொதுக்கூட்டம் வரும் ஜனவரி 18 இல் கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

தேசிய முன்னணி தலைவரும்  துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.

இப் பொதுக்கூட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 3,000க்கும் மேற்பட்ட பிபிபி பேராளர்கள் கலந்து கொள்வார்கள்.

இதில் கட்சியின் முதன்மைப் பிரிவு, இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு பிரதிநிதிகளும் அடங்குவர்.

டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹித் ஹமிடி இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார். 

அவரின் உரையில் கூட்டணிக்குள் பிபிபியின் முக்கியத்துவமும் தொடர்ந்த பங்கும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து அவர் நல்ல செய்திகளை அறிவிப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் இந்த ஆண்டு பொதுக்கூட்டம், பிபிபி கட்சியின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

பொதுக்கூட்டத்தின்  இரண்டாம் அமர்வில், பிபிபி பேராளர்கள் 7 தீர்மானங்களை விவாதித்து முன்வைப்பார்கள். 

இவை கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள், தேசிய ஒற்றுமை, இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக்கிய தேசிய விடயங்களை உள்ளடக்கியவை.

அதில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அரச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். 

இதன் மூலம், மலேசியா மக்கள் அனைவருக்கும் சமமான, உள்ளடக்கமிக்க, நியாயமான கல்வி அணுகல் உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கோரப்படுகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset