நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்

கோலாலம்பூர்:

யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கல்வியமைச்சரிடம் கொண்டு சேர்ப்பேன்.

தேசிய ஒருமைப்பாடுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் இதனை கூறினார்.

கல்வி தந்தை என போற்றப்படும் டான்ஸ்ரீ தம்பிராஜா உருவாக்கிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாட்டில் பெரும் கல்வி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 60,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவாக்கியுள்ளது.

கல்வியின் வாயிலாகவே ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற அடிப்படையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தற்போது வெற்றியை கண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் என்ற முறையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்துடன் இணைந்து செயல்படுவேன்.

அதே வேளையில் மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகளை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இதுபோன்ற தேர்வுகள் மிகவும் அவசியமாகும்.

ஆக இக்கோரிக்கைகளை கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கின் பார்வைக்கு கொண்டு செல்வேன்.

வரும் செவ்வாய்க்கிழமை அவரை சந்திக்கும் போது இவ்விவகாரம் குறித்து பேசுவேன் என்று யுனேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset