நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா

கோலாலம்பூர்:

கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் உருவெடுக்கும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

இந்திய சமுதாயதவரிடையே கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு தற்போது 44 வயதாகிறது.

50ஆவது வயதை எட்டும் போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தும். 

அதே வேளையில்  அடுத்த 16 ஆண்டுகளில்  கல்வித் தந்தை டான்ஸ்ரீ தம்பிராஜா 100 வயதை எட்டுகிறார்.

அப்போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உலகக் கல்வி சக்தியாக உருவெடுக்கும்.

இதற்கான நடவடிக்கைகளும் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் சாதிக்கும் என்று சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset