நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் மஇகா நீடிப்பது அல்லது வெளியேறுவது குறித்த முடிவு பிப்ரவரியில் எடுக்கப்படலாம்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

தேசிய முன்னணியில் மஇகா நீடிப்பது அல்லது வெளியேறுவது குறித்த முடிவு பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்படலாம்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கோடிக்காட்டினார்.

தைப்பூச விழா கொண்டாட்டங்களுக்குப் பிறகு மஇகா இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தைப்பூசத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம்.

ஒருவேளை பிப்ரவரி தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இந்த முடிவு எடுக்கப்படும்.

இம்மாதம்  அம்னோ பொதுப் பேரவை நடைபெறவுள்ளது. எனவே முதலில் அதை முடித்துக் கொள்வோம்.

பேரா தாப்பா மஇகா தலைமையகத்தில் நாடாளுமன்றத்தில் பி40 வர்த்தகர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

மஇகா கூட்டணியிலிருந்து விலகுவதாக வதந்திகள் பரவிய போதிலும், தேசிய முன்னணி உடனான கட்சியின் உறவு இன்னும் இணக்கமாக உள்ளது.

16ஆவது பொதுத் தேர்தல் வரை மஇகா தேசிய முன்னணி உடன் தொடருமா என்பது குறித்த இறுதி முடிவை கட்சியின் உச்சமன்றம் எடுக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset