நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் முழு மன்னிப்புக்கான தீர்மானத்தை மஇகா முழுமையாக ஆதரிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

டத்தோஸ்ரீ நஜிப்பின் முழு மன்னிப்புக்கான தீர்மானத்தை
மஇகா முழுமையாக ஆதரிக்கிறது.

மஇகா துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு முழு மன்னிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் 2025 ஆம் ஆண்டு அம்னோ பொதுச் பேரபையில் கொண்டு வரப்படவுள்ளது

இந்த தீர்மானத்திற்கு மஇகா
ஆதரவு தெரிவிக்கிறது.

முன்னாள் தேசிய முன்னணி தலைவரை விடுவிப்பதற்கான ஒரு நல்ல திட்டமாக டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்குவது கருதப்படுகிறது.

நீதிமன்றத்தால் முன்னர் தீர்மானிக்கப்பட்ட 1 எம்டிபி வழக்கு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் நஜிப்பிற்கு சாதகமாக இல்லை.

அதே வேளையில் அம்னோ மாநாட்டில்  கிட்டத்தட்ட 100 பிரிவுகள் இந்த விஷயத்தில் முடிவு செய்துள்ளன.

ஒருவேளை இது ஒரு நல்ல திட்டமாக இருக்கலாம். இதனால் மஇகா அதை ஆதரிக்கிறது.

தாப்பாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset