நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறன் மேம்பாட்டு நிதியகத்தின் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கடப்பிதழ் முடக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

திறன் மேம்பாட்டு நிதியகத்தின் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கடப்பிதழ் முடக்கப்படும்.

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் திறன் மேம்பாட்டு நிதியகத்திற்கு வருகை மேற்கொண்டேன்.

திறன் மேம்பாட்டு நிதியகத்தின் செயல்பாடுகள், பயிற்சியாளர்களுக்கு நிதி வழங்கும் நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக இளைஞர்களுடையே திவேட் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திவேட் கல்விக்கு ஒதுக்கும் நிதி முறையாக மக்களை சென்றடைய வேண்டும் உட்பட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதே வேளையில் இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதாவது திறன் மேம்பாட்டு நிதியகம் முழுமையாக இலக்கவியலுக்கு மாறவுள்ளது.

தொழில் திறன் கல்வி கடனுக்கான விண்ணப்பம் என அனைத்தும் இணையத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

திறன் மேம்பாட்டு நிதியகத்தில் கடன் பெற்ற பலர் அதனை திருப்பி செலுத்துவது இல்லை.

இதனால் அவர்களின் கடப்பிதழை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.

முதல் கட்டமாக  இந்த நிதியில் படித்து தற்போது 5,000 ரிங்கிட்டுக்கும் மேல் சம்பளம் பெறுபவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திறன் மேம்பாட்டு நிதியகத்தில் இதுவரை 5 லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர்.

இதில் 20 சதவீதம் இந்தியர்கள் ஆவர் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset